6. அபகார நிந்தைபட் …… டுழலாதே

ராகம் : பைரவி / முகாரி / ஹுசைனி

பாடியவர் : இசைவேணி பாம்பே அபர்ணா
பிண்ணனி இசை : ஸ்ரீமதி சத்யா, ஹைதராபாத்

அபகார நிந்தை பட்டு
ஏன் ஊழல்கிறாய் மனமே
ஆவினன் குடி ஆண்டவனை
ஏன் மறக்கிறாய் (அ)

உபதேசம் அளித்தானே உபகாரம் செய்தானே
ஜெபமாலை தந்தானே குருவாக வந்தானே (அ)

இமவான் மகள் புதல்வன்
இபமாமுகன் இளையவன்
தபமாறு செய்தால் அருள்பவன்
நித்தமும் அவன் புகழ் பாடாது (அ)

……… பாடல் ………


அபகார நிந்தைபட் …… டுழலாதே
     அறியாத வஞ்சரைக் …… குறியாதே

உபதேச மந்திரப் …… பொருளாலே
     உனைநானி னைந்தருட் …… பெறுவேனோ

இபமாமு கன்தனக் …… கிளையோனே
     இமவான்ம டந்தையுத் …… தமிபாலா

ஜெபமாலை தந்தசற் …… குருநாதா
     திருவாவி னன்குடிப் …… பெருமாளே.

2 thoughts on “6. அபகார நிந்தைபட் …… டுழலாதே

Leave a Reply

Your email address will not be published.