2. அகரமுமாகி…

ராகம் : புன்னாகவராளி, தாளம் : ஆதி

எழுத்து : வேதாந்தக் கவியோகி
பாடியவர் : இசைவேணி பாம்பே அபர்ணா

அகரமுமாகிய அழகு முருகா எனத
(அ)திபதியே நீ அழகு முருகா (அ)

அரி அயன் அரன் அந்த அனைவருக்கும்
அதிபதி நீயே அறிவேனே (அ)

வருவாய் வருவாய் என் முன்னே
திருப்புகழ் தன்னை பாடுகின்றேன்
இருநிலம் மீதில் எளியேன் இருப்பேன்
ஒரு உருவம் தாங்கி வர வேணும் (அ)

வேடன் செய் பூஜையை விரும்பியவன் நீயே
கூடிய தேவேந்திரன் வணங்கியவன் நீயே
பாடிய பழமுதிர் சோலையின் பரம் நீயே
ஆடிய மயிலின் அழகே முருகா முருகா (அ)

திருப்புகழ் 1307 அகரமுமாகி  (பழமுதிர்ச்சோலை)

தனதன தான தனதன தான தனதன தான …… தனதான

……… பாடல் ………

அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி …… அகமாகி

அயனென வாகி அரியென வாகி அரனென வாகி …… அவர்மேலாய்

இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி …… வருவோனே

இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி …… வரவேணும்

மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் …… வடிவோனே

வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம …… முடையோனே

செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு …… மயிலோனே

திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு …… பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published.