அடிமை ஆனேனே

ராகம் : நாட்டைக்குறிஞ்சி
எழுத்து : நாகசுந்தரம்
குரல் : ஸ்ரீமதி அபர்ணாகிருஷ்ணன்

பல்லவி

அடிமை ஆனேனே அம்பலத்தாடும்
அந்த சிவனுக்கு அன்றே நான் (அ)

அனுபல்லவி

சத்குருவாய் வந்து சொன்னாரே மந்திரம்
புத்தியாம் பொன்னம்பலத்தாடும் சிவனுக்கு (அ)

சரணம்

சொந்தமாய் சிந்திக்க சுயபுத்தி சிறிதுமில்லை
பந்தத்தில் உழன்றாலும் பற்று விலகவில்லை
சந்தத்தில் கவிபாட சந்தக்கவியோகி நானில்லை
மந்தனாம் மனதினில் மாய்கை புகுமுன்னே (அ)

சொன்ன சொல் ஸோஹம்
சொரூபம் ஆனேனே
இன்னொரு பிறவிக்கு ஏதும் பாக்கியில்லை
மன்னரும் மாந்தரும் உதவிக்கு யாருமில்லை
சன்னமாய் செவியினில் அது நீயே என்றபோதே (அ)

Leave a Reply

Your email address will not be published.